3-ம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை
சிவகங்கை மாவட்ட தாலுகா அலுவலகங்களில் 3-ம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் பொது வினியோகத்திட்டத்தில் 3-ம் பாலினத்தவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) அன்று அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் மின்னணு குடும்ப அட்டை பெறாத 3-ம் பாலினத்தவர்கள், மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க வரும்பொழுது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) இவற்றுடன் புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
மேலும் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவார்கள். 3-ம் பாலினத்தவர்கள் தாங்கள் குடியிருக்கும் தாலுகாவில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு கொடுக்கலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story