வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன


வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன
x
தினத்தந்தி 12 Feb 2021 1:16 AM IST (Updated: 12 Feb 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன

 கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் விறகு ஏற்றிக்கொண்டு வந்த லாரி மேலே சென்ற மின்வயர்களை உரசியது. இதனால் அதிக மின்னழுத்தம் ஏற்பட்டு சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி, குளிர்சாதன பெட்டி,, செட்டாப் பாக்ஸ்கள், மின்விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் கருகி சேதமடைந்தன. லாரி மின்வயர் மீது மோதிய போது எழுந்த தீப்பிழம்பை பார்த்த இளைஞர்கள் லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர் தப்பியோடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடுகளில் சேதமான மின்சாதன பொருட்கள் பழுதை சரிசெய்ய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story