என்.சி.சி. மாணவர்கள் ஊர்வலம்
பாளையங்கோட்டையில் என்.சி.சி. மாணவர்கள் ஊர்வலம் நடந்தது.
நெல்லை:
தூய்மை இந்தியா திட்டம் சார்பில், தமிழ்நாடு 5-வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீஸர் லெப்டினன்ட் கர்னல் தினேஷ் நாயர் உத்தரவின்பேரில், சுபேதார் மேஜர் ராஜேஷ் மேற்பார்வையில், பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. துணை லெப்டினன்ட் கந்தன், தூய சவேரியார் கல்லூரி, ம.தி.தா. இந்து கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர்.
அவர்கள் பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளை அகற்றினர். பிளாஸ்டிக் கழிவுகளும் அகற்றப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள புல் புதர்களை வெட்டி சுத்தம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுபேதார் முனிவேல், ஹவில்தார் சுதாகரன் ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story