கருமலை அருகே சாலை வசதி கேட்டு அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்


கருமலை அருகே சாலை வசதி கேட்டு அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 12 Feb 2021 2:16 AM IST (Updated: 12 Feb 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

கருமலை அருகே சாலை வசதி கேட்டு அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

கருமலை அருகே சாலை வசதி கேட்டு அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்
மணப்பாறை, பிப்.12-
கருமலை அருகே சாலை வசதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்தனர்.
சாலை வசதி
மருங்காபுரி ஒன்றியம் எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட மாங்கானாபட்டி அருகே உள்ள வீரமலை களம் என்ற வடக்கிகளத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு முறையான சாலை வசதி உள்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை.
அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களை தூக்கிக்கொண்டுதான் சாலைக்கு வரும் சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் எடுத்து கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
அரசு பஸ் சிறை பிடிப்பு
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் துறையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி கூறியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story