ஈரோட்டில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள் உள்பட 3½ லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோட்டில் கடந்த 9 நாட்களாக தினமும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த தொடர் போராட்டம் நேற்று ஆர்ப்பாட்டத்துடன் நிறைவு பெற்றது. ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் சுமதி தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மணிபாரதி, அரசு ஊழியர் சங்க மாநில முன்னாள் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் மாநில துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் விஜய்மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story