ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 700 மாடுகள் விற்பனை
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 700 மாடுகள் விற்பனை ஆனது.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. அதன்படி நேற்று கூடிய சந்தைக்கு ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், திருப்பூர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் 350 பசுமாடுகள், 350 எருமை மாடுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதேபோல் 100 கன்றுக்குட்டிகளும் கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.76 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும் விற்பனையானது.
இந்த மாடுகளை தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து விலைபேசி பிடித்துச்சென்றனர்.
Related Tags :
Next Story