பரமத்திவேலூரில் ரூ9 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ9 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தாற்போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.
கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 396 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.134-க்கும், குறைந்தபட்சமாக ரூ.121.39-க்கும், சராசரியாக ரூ.133.98-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 672-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 12 ஆயிரத்து 769 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.134.96-க்கும், குறைந்தபட்சமாக ரூ.120.89-க்கும், சராசரியாக ரூ.127.69-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.8 லட்சத்து 95 ஆயிரத்து 258-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
Related Tags :
Next Story