கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம்
சாலை பாதுகாப்பு தொடர்பாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம், திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல்:
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் சாலை பாதுகாப்பு தொடர்பாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம், திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நேற்று நடைபெற்றது.
இதனை போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தொடங்கி வைத்தார். அப்போது சாலை விதிகளை மீறுவதால் ஏற்படும் விபத்துகள், அதை தவிர்க்க மேற்கொள்ள வேண்டியவை தொடர்பாக கல்லூரி மாணவர்கள் நடித்து காண்பித்தனர்.
இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.
Related Tags :
Next Story