கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்


கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட  தண்ணீர் நிறுத்தம்
x
தினத்தந்தி 12 Feb 2021 3:11 AM IST (Updated: 12 Feb 2021 3:11 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

பவானிசாகர்
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஜனவரி மாதம் 7-ந் தேதி முதல் வருகிற ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை குறிப்பிட்ட நாட்களுக்கு இடைவெளிவிட்டு 5 சுற்றுகளாக கீழ்பவானி வாய்க்காலில் 2-ம் போகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டது. 
இந்நிலையில் நேற்று காலை முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட 2-ம் சுற்று தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.  நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 436 கனஅடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 95.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்காக வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. 3-ம் சுற்றுக்கான தண்ணீர் 10 நாட்கள் கழித்து மீண்டும் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story