செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 33 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 33 பேர் பாதிக்கப்பட்டனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 50 ஆயிரத்து 912 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 772 பேர் உயிரிழந்துள்ளனர். 270 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 43 ஆயிரத்து 813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 42 ஆயிரத்து 881 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 240 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 692 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 348 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 28 ஆயிரத்து 817 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 441- ஆக உயர்ந்தது. 90 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story