செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் - பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் - பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Feb 2021 3:05 AM GMT (Updated: 12 Feb 2021 3:05 AM GMT)

செல்போனில் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொன்னேரி,

பொன்னேரி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் ராகேஷ் (வயது 13). இவர் பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளி கடந்த 11 மாதங்களாக பள்ளி விடுமுறை அளித்த நிலையில் பள்ளி மாணவர் ராகேஷ் செல்போனில் விளையாடி கொண்டிருந்தார். இதை அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷை, உறவினர் வீட்டில் விட்டு விட்டு பெற்றோர் வேலைக்கு சென்றனர். பள்ளி மாணவர் ராகேஷ் அறையில் உள்தாள்ப்பாள் போட்டு கொண்டு நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. மாணவரை தேடியபோது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

அங்கு இருந்தவர்கள் ராகேஷை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story