கலைஞர் கணினி கல்வியகத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் - இந்து என்.ராம் வழங்கினார்
கலைஞர் கணினி கல்வியகத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை இந்து என்.ராம் வழங்கினார்.
சென்னை,
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்பேரில் மா.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. முயற்சியால் சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் ‘கலைஞர் கணினி கல்வியகம்’ கடந்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி தொடங்கப்பட்டது. இங்கு ஏழை-எளிய மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் 3 பிரிவுகளாக மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது முதல் பிரிவில் 83 மாணவிகளும், 2-வது பிரிவில் 73 மாணவர்களும், 3-வது பிரிவில் 18 மாணவர்களும் பயிற்சியை முடித்துள்ளனர்.
அவர்களுக்கு ‘டேலி நிறுவனம்’ மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவும், புதிய மாணவர்கள் சேர்க்கை தொடக்க விழாவும் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு மா.சுப்பிரமணியம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ‘இந்து’ குழுமத்தின் இயக்குனர் ‘இந்து’ என்.ராம் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டய சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story