பரங்கிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
பரங்கிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த பரங்கிமலை ஏழுகிணறு முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 57). இவர், அதே பகுதியில் உறவினர் இறந்துவிட்டதால் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அறையில் சிதறி கிடந்தது.
பின்னர் பீரோவை சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரிந்தது. ஜெயந்தி, சாவு வீட்டுக்கு சென்றிருப்பதை அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியது தெரிந்தது.
இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், அங்கு
Related Tags :
Next Story