கோயம்பேடு, மதுரவாயலில் நவீன எல்.இ.டி. சிக்னல்கள் திறப்பு ‘ஹூண்டாய் மோட்டார்’ நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டது


கோயம்பேடு, மதுரவாயலில் நவீன எல்.இ.டி. சிக்னல்கள் திறப்பு ‘ஹூண்டாய் மோட்டார்’ நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டது
x
தினத்தந்தி 12 Feb 2021 11:15 AM IST (Updated: 12 Feb 2021 11:15 AM IST)
t-max-icont-min-icon

‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடேட்’ நிறுவனம் சார்பில் சென்னை கோயம்பேடு, மதுரவாயலில் நிறுவப்பட்ட நவீன எல்.இ.டி. சிக்னல்கள் திறக்கப்பட்டன.

சென்னை,

‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் சமூகத்தொண்டு பிரிவான ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன்’, சென்னை போக்குவரத்து போலீசாருடன் இணைந்து சென்னை கோயம்பேடு, மதுரவாயல் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலை சந்திப்புகளில் நவீன தானியங்கி எல்.இ.டி.சிக்னல்களை நிறுவியது. அந்த நிறுவனம் சார்பில் 200 சாலை தடுப்புகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சிக்னல்களின் பயன்பாட்டினை ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷன்’ அறங்காவலர் ஜே.ஸ்டீபன் சுதாகர், துணை தலைவர் புனீத் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் டாக்டர் என்.கண்ணன் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ‘ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுண்டேஷனின்’ அறங்காவலர் ஜே.ஸ்டீபன் சுதாகர் கூறியதாவது:-

சாலை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி டிரைவர்களுக்கும், பாதசாரிகளுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு எங்கள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இதுவும் ஒரு பகுதி ஆகும்.

சென்னை மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கும், மாநகரத்தின் போக்குவரத்தை மிகச்சிறப்பாக நிர்வகிப்பதற்கும் சென்னை போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பணிபுரிவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

2019-ம் ஆண்டில் சென்னையில் முதன்முதலில் அண்ணாநகரில் போக்குவரத்து ஒழுங்குவிதி கண்காணிப்பு மண்டலத்தை வெற்றிகரமாக அமல்படுத்தியன் அடுத்த கட்டமாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story