அம்மா மினி கிளினிக் தொடக்கம்
ஆடையூரில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை
ஆடையூரில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடையூர் ஊராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு, அதன் திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட ஆவின் தலைவரும், திருவண்ணாமலை அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை சுகாதாரத் துணை இயக்குனர் அஜிதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்ேகற்று அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார்.
அம்மா மினி கிளினிக்கில் ஆடையூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் 8 கிராம மக்களை சேர்ந்த 9 ஆயிரத்து 257 பேர் பயன்பெறலாம். அதில் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் பணியில் இருப்பர். காலை 8 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை, மாலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை செயல்படும். அங்கு சிறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
விழாவில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, திட்ட மருத்துவ அலுவலர்கள் விஜயரமணன், விக்னேஷ், உதவி இயக்குனர் (பிறப்பு மற்றும் இறப்பு) சுரேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட பேரவை செயலாளர் பீரங்கி வெங்கடேசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் நாராயணன், நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் குமாரசாமி, ஏ.ஏ.ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story