மது விற்ற 3 பேர் கைது


மது விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 Feb 2021 5:44 PM IST (Updated: 12 Feb 2021 5:44 PM IST)
t-max-icont-min-icon

மது விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாயல்குடி,
சாயல்குடி அருகே மாரியூர் பகுதியில் மது விற்பனை செய்வதாக தகவல் வந்ததன் பேரில் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமை யிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மாரியூர் பகுதியில் மது விற்பனை செய்ய முருகன் (வயது44) வீட்டின் பின்புறம் மறைத்து பதுக்கி ைவத்திருந்த 42 மதுபாட்டில்களையும், அதே ஊரைச் சேர்ந்த நாகசாமி (45) வைத்திருந்த 150 மதுபாட்டில்களையும், அதே கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா (45) வைத்திருந்த 40 மது பாட்டில் களையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து 3 பேரையும் சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கைது செய்தார்.

Next Story