பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் பணியை விரைவில் முடிக்க ஒப்பந்தம்
பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் பணியை விரைவில் முடிக்க மேலும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலம் பணியை விரைவில் முடிக்க மேலும் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
பழமையான பாலம்
மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ெரயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதுபோல் 104 ஆண்டுகளை கடந்து பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் ரூ.250 கோடியில் புதிதாக ெரயில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த புதிய ெரயில் பாலம் கட்டும் பணி பாம்பன் ெரயில்வே பாலத்தில் ஒரு பகுதியான கிழக்கு பகுதியில் இருந்தே ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ெரயில்பால பணிகளை துரிதப்படுத்தி தீவிரப்படுத்தவும் ெரயில்வேதுறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதைத்தொடர்ந்து பாம்பன் ெரயில் பாலத்தில் மற்றொரு பகுதியான மேற்கு பகுதியில் இருந்தும் புதிய ெரயில் பாலத்திற்கு கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதுவரையிலும் இந்த புதிய ெரயில்பால பணிகளை குஜராத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மட்டுமே எடுத்து நடத்தி வந்தது.
ஒப்பந்தம்
தற்போது ஐதராபாத்தைச் சேர்ந்த மேலும் ஒரு நிறுவனம் இந்த பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள அந்த கம்பெனி மூலமாக மண்டபம் பகுதியில் இருந்து தொடங்கும் கடல் பகுதியில் கடலுக்குள் தூண்கள் அமைப்பதற்காக ஏராளமான உபகரணங்களை இறக்கி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த மாத இறுதியில் இருந்து மேற்கு பகுதியில் இருந்தும் கடலுக்குள் புதிய ெரயில் பாதை பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் வருகிற 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்த புதிய ெரயில் பால பணிகள் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் ெரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story