கள்ளக்குறிச்சியில் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி,
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள், துணைத்தலைவர்கள் பரசுராமன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ரேஷன்கடை பணியாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சமவேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும், பணி வரன்முறை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளர்கள் கோவிந்தராஜ், சேகர், மகளிர் அணி செயலாளர் லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ஏழுமலை நன்றி கூறினார்.
Related Tags :
Next Story