இன்மையில் நன்மை தருவார் கோவில் மாசி திருவிழா
இன்மையில் நன்மை தருவார் கோவில் மாசி திருவிழா 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மதுரை,
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசி திருவிழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையும், மாலையும் சாமி, அம்மனுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 25-ந் தேதி காலை 11 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதையடுத்து 26-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மாசி திருவிழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் கணபதிராமன், கோவில் அர்ச்சகர் தர்மராஜ்சிவம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story