மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; கால் துண்டாகி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; கால் துண்டாகி வாலிபர் பலி
x
தினத்தந்தி 12 Feb 2021 11:12 PM IST (Updated: 12 Feb 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் கால் துண்டாகி வாலிபர் பலியானார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் கால் துண்டாகி வாலிபர் பலியானார். இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டிராக்டர் மோதியது
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த நாகக்குடையான் கிராமம் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் பாபா என்கின்ற பாரதி (வயது25). கூலி தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் முருகமணி(21). இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.
இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் செம்போடையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். பாரதி மோட்டார் சைக்கிளை ஓட்டினார். முருகமணி பின்னால் அமர்ந்து வந்தார். வேதாரண்யம்-நாகை ரோட்டில் செம்போடை தெற்கு கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கால் துண்டாகி பலி
இந்த விபத்தில் பாரதியின் வலது கால் துண்டாகி கீழே விழுந்தது. முருகமணி படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். 
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்களை நாகை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முருகமணி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் 
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த கையிலவனம் பேட்டை ஜெயராமன் மகன் வீரமணியை(24) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story