உடலை மீட்டுத்தர வேண்டும்
மலேசியாவில் மன்னார்குடியை சேர்ந்த தொழிலாளி இறந்தார். அவரது உடலை மீ்ட்டுத்தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மனு அளித்தார்.
திருவாரூர்;
மலேசியாவில் மன்னார்குடியை சேர்ந்த தொழிலாளி இறந்தார். அவரது உடலை மீ்ட்டுத்தர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மனு அளித்தார்.
டிரைவர் வேலை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் ராசப்பன்சாவடி ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜராஜன். இவருைடய மனைவி சுகன்யா. நேற்று சுகன்யா திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான்(சுகன்யா) மன்னார்குடி ஒன்றியம் ராசப்பன்சாவடி ராஜபுரம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் ராஜராஜன்(வயது40) கடந்த 2 ஆண்டு முன்பு மலேசியாவுக்கு டிரைவர் வேலைக்கு சென்றார். கடந்த 11-ந் தேதி எனது கணவர் ராஜராஜன் உயிரிழந்ததாக நீடாமங்கலம் போலீஸ் நிலையம் மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது.
உடலை மீட்டுத்தர கோரிக்கை
வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற எனது கணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனது கணவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. எனவே மலேசியாவில் உள்ள எனது கணவர் உடலை மீட்டுத்தர திருவாரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவர் உயிரிழப்புக்கான காரணம் குறித்தும் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story