டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்குடியில் டாக்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
காரைக்குடி,
நவீன மருத்துவத்திற்கு எதிராக தற்போதைய மத்திய அரசின் கொள்கையை திரும்ப பெறக்கோரி இந்திய மருத்துவ சங்கம் (கே.எம்.சி) கிளை சார்பில் காரைக்குடி புதிய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க (கே.எம்.சி) கிளைத்தலைவர் டாக்டர் மைதிலி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் கிளை செயலாளர் டாக்டர் சந்திரமோகன், பொருளாளர் டாக்டர் பாலாஜி, மூத்த ஆலோசகர்கள் டாக்டர்கள் நடேசன், முருகராஜ், காமாட்சிசந்திரன், மணிவண்ணன் உள்பட 50-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story