அனுமதி நேரம் மாற்றம்; பாபநாசம் சோதனை சாவடியில் காத்துக்கிடந்த சொரிமுத்து அய்யனார் கோவில் பக்தர்கள்


அனுமதி நேரம் மாற்றம்; பாபநாசம் சோதனை சாவடியில் காத்துக்கிடந்த சொரிமுத்து அய்யனார் கோவில் பக்தர்கள்
x
தினத்தந்தி 13 Feb 2021 1:05 AM IST (Updated: 13 Feb 2021 1:05 AM IST)
t-max-icont-min-icon

அனுமதி நேரம் மாற்றத்தால் பாபநாசம் சோதனை சாவடியில் சொரிமுத்து அய்யனார் கோவில் பக்தர்கள் காத்து கிடந்தனர்.

விக்கிரமசிங்கபுரம்:

அனுமதி நேரம் மாற்றத்தால் பாபநாசம் சோதனை சாவடியில் சொரிமுத்து அய்யனார் கோவில் பக்தர்கள் காத்து நின்றனர்.

சொரிமுத்து அய்யனார் கோவில்

காரையாறு காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல் நேற்று சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்தனர்.

வழக்கமாக பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடந்த மாதம் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி நேரம் அதாவது காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று மாற்றப்பட்டது.

பக்தர்கள் அவதி

ஆனால் பலருக்கு இது தெரியாத நிலையில் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் வந்தனர். காலை 6 மணிக்கு சோதனை சாவடி திறக்கப்பட்டு விடும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சோதனை சாவடி திறக்கப்படாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 8 மணிக்கு சோதனை சாவடி திறக்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக வருவாய் துறை மற்றும் பேரிடர் மீட்பு துறையினரால் உத்தரவிடப்பட்டு மாற்றம் செய்யப்பட்ட சோதனை சாவடி நேரத்தை மீண்டும் பழைய நேரப்படி செயல்படுத்த வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வெளியூர் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story