எலந்தக்கரையில், கண்டெடுக்கப்பட்ட ெதால்லியல் பொருட்கள்
எலந்தக்கரையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பார்வையிட்டார்.
காரைக்குடி,
எலந்தக்கரையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பார்வையிட்டார்.
தொல்லியல் பொருட்கள்
காளையார்கோவில் அருகே உள்ள எலந்தக்கரையில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களை அதன் சேகரிப்பாளர் காளையார்கோவிலை சேர்ந்த ரமேஷ், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து வழங்கினார். அதை அவர் பார்வையிட்டார்.
பின்னர் துணைவேந்தரின் வழிகாட்டுதல்படி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் சரவணக்குமார் தலைமையில் பேராசிரியர்கள் எலந்தக்கரையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்பில் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டது.
இது குறித்த திட்ட அறிக்கை ெடல்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறைக்கு பல்கலைக்கழகத்தால் தமிழக அரசு வழியாக அனுப்பப்பட்டது. டெல்லி மத்திய தொல்லியல் கழகம் 2020-21 கல்வி ஆண்டில் அகழாய்வு செய்ய அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் முறை
மத்திய தொல்லியல் துறையிலிருந்து ஒரு தொல்லியாளரை அகழாய்வில் ஈடுபடுத்தவும் சம்மதம் தெரிவித்துள்ளது. இது குறித்து அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் கூறியதாவது:-
, மத்திய தொல்லியல் துறை பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழகத்தில் ஆய்வு செய்வது இதுவே முதல் முறையாகும். அழகப்பா பல்கலைக்கழகமும் தமிழக தொல்லியல் துறையும் இணைந்து தொல்லியல் அகழாய்வுகள், களஆய்வுகள் மற்றும் வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தொல்லியல் ஆர்வலர் ரமேஷ் மூலம் பெறப்பட்ட பொருட்களின் மூலமாக இப்பகுதி சிறந்ததொரு கலாசாரத்தையும், பண்பாட்டையும் கொண்டு விளங்கியுள்ளது என்பது தெரியவருகின்றது.
அழகப்பா பல்கலைக்கழகம் நடத்த இருக்கின்ற ஆய்வின் மூலம் அரிய பொருட்களும், பண்பாட்டு எச்சங்களும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.தமிழக வரலாற்றில் சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வுக்கு இணையாக எலந்தக்கரை இருக்கக்கூடும் என்பது கிடைத்திருக்கும் பொருட்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. இதனை அழகப்பா பல்கலைக்கழகம் நடத்தவிருக்கும் அகழாய்வு மேலும் உறுதி செய்யும். ஆய்வு மார்ச் 2-வது வாரத்தில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வெட்டுப்படிகள்
இந்த அரும்பொருட்கள் ஒப்படைப்பு நிகழ்வின் போது கல்வெட்டு ஆய்வாளர் மேலப்பனையூர் ராஜேந்திரன் தனது வாழ்நாள் காலத்தில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் எடுக்கப்பட்டு தனது பாதுகாப்பில் வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட கல்வெட்டுப்படிகளை துணைவேந்தரிடம் ஒப்படைத்தார்.அதனை துணைவேந்தர் வரலாற்றுத்துறை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.
Related Tags :
Next Story