மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி


மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி
x
தினத்தந்தி 12 Feb 2021 7:52 PM GMT (Updated: 12 Feb 2021 7:52 PM GMT)

சிங்கம்புணரியில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியை பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியை பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கபடி போட்டி

சிங்கம்புணரி ஒன்றிய, நகர தி.மு.க., இளைஞரணி சார்பில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடி போட்டி சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பின்புறம் நடைபெற்றது. இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 22 அணிகள் கலந்து கொண்டன.
முன்னதாக சிங்கம்புணரி அண்ணா மன்றம் அருகே விழா குழு தலைவர் முன்னாள் அமைச்சரும் மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரியகருப்பன் கொடியசைத்து மாபெரும் பேரணியை தொடங்கி வைத்தார்.
10-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மற்றும் மஞ்சுவிரட்டு காளைகளுடன் கபடி போட்டி வீராங்கனைகள் காரைக்குடி சாலை வழியாக மைதானத்திற்கு வந்தனர். போட்டியை பெரிய கருப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் மாநில இலக்கிய அணி தலைவர் தென்னவன், திருப்பத்தூர் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான அருணகிரி, மற்றும் அவைத்தலைவர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோகரன், ஆர்.எம்.எஸ். டாக்டர் அருள்மணி நாகராஜன், ஒன்றிய செயலாளர் பூமிநாதன், நகர செயலாளர் யாகூப், பொதுக்குழு உறுப்பினர் அம்பலமுத்து, சோமசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் கணேசன், அஞ்சப்பர் ஓட்டல் ஜெயராமன், ஜமாத் தலைவர் ராஜாமுகமது, நகர தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச்செயலாளர் பூரண சங்கீதா, விவசாய அணி காளாப்பூர் செல்வகுமார், கூட்டுறவு சொசைட்டி வங்கி துணை தலைவர் இந்தியன் செந்தில், ஒன்றிய துணை செயலாளர் சிவபுரி சேகர், மணப்பட்டி பாஸ்கரன், பார்த்திபன், ஞானி செந்தில், நியூ காலனி செந்தில், ஆசிரியர் தனுஷ்கோடி, மதிசூடியன், தொழில்நுட்ப பிரிவு சையது, நிலவள வங்கி புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெண்களுக்கான கபடி போட்டி 2 நாட்களும், ஆண்களுக்கான கபடி போட்டி 4 நாட்களும் நடக்கிறது.

Next Story