விளைநிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
விக்கிரமசிங்கபுரத்தில் விளைநிலத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அனவன் குடியிருப்பு பகுதியில் வாழும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இவர்கள் தங்களது விளை நிலங்களில் நெல், கரும்பு, தென்னை உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளனர்.
இந்த விளைநிலங்களில் யானை, காட்டுப்பன்றி, மிளா போன்ற விலங்குகள் அவ்வப்போது புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் அனவன் குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்த சுந்தரி என்பவருக்கு சொந்தமான விளைநிலத்தில் 5 காட்டு யானைகள் புகுந்தன. அவை அங்கு பயிரிடப்பட்டு உள்ள இன்னும் 25 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய அளவில் இருந்த நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தின.
குடியிருப்பு பகுதிக்கு மிகவும் அருகாமையில் உள்ள வயலில் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்து இருப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story