சுகாதார ஊழியர்கள் 5-வது நாளாக போராட்டம்
புதுவையில் சுகாதார ஊழியர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
இடைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஊழியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புதுவையில் அவர்கள் நேற்று முன்தினம் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு தலைமை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அப்போது உடன்பாடு ஏதும் ஏற்படாததால் போராட்டம் தொடர்கிறது.
5-வது நாளான நேற்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து சுகாதார துறை ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதேபோல் புதுவை அரசு செவிலியர் கூட்டு நடவடிக்கை குழுவினர் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை முன்பு கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடத்தினார்கள். இதில் கூட்டு நடவடிக்கைக்குழு பொறுப்பாளர்கள் சாந்தி, விமலா, செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story