சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம்-ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவோம் என ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்
திருப்பரங்குன்றம்
மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் மேற்குபகுதி வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச்செயலாளர் முத்துக்குமார், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு பகுதி செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, அ.தி.மு.க.வில் ஜெயலலிதா இல்லாத வெற்று இடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரப்புகிறார். அம்மாவால் உருவாக்கப்பட்ட மக்களுக்கான தொலைநோக்கு திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி தொடரும். அதில் ஐயப்பாடு இல்லை. அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை பட்டியலை மக்களுக்கு கொடுத்து வாக்கு சேகரிப்போம். தி.மு.க.வை வீழ்த்துவோம் என்றார்
Related Tags :
Next Story