திருக்குறள் ஒப்புவித்தால் மாணவ-மாணவிகள் இலவசமாக பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம்


திருக்குறள் ஒப்புவித்தால் மாணவ-மாணவிகள் இலவசமாக பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம்
x
தினத்தந்தி 13 Feb 2021 2:37 AM IST (Updated: 13 Feb 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

திருக்குறள் ஒப்புவித்தால் மாணவ-மாணவிகள் இலவசமாக பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம் என்று அதன் உரிமையாளர் அறிவித்துள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அரவக்குறிச்சி
திருக்குறள் ஒப்புவித்தால்...

கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி பெத்தான் கோட்டை பிரிவு அருகே ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. தமிழ் மீதும், திருக்குறள் மீதும் அதிக பற்று கொண்ட அதன் உரிமையாளர் மாணவ-மாணவிகளிடம் திருக்குறளின் பெருமைகளை கொண்டு சேர்க்கும் வகையில், 10 திருக்குறளை ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறளை ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோலும் இலவசமாக நிரப்பிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
அதாவது, மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோருடன் இங்கு வந்து 10 திருக்குறளை ஒப்புவிக்க வேண்டும். பின்னர், அந்த மாணவ-மாணவிகள் தங்களது பெயர், பெற்றோர் பெயர், முகவரி, செல்போன் எண், வாகன எண் ஆகியவற்றை கொடுத்து விட்டு செல்ல வேண்டும். பின்னர், அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவுடன் வந்து இலவசமாக பெட்ரோல் நிரப்பிக் கொள்ளலாம்.
வியாபார யுக்தி அல்ல...
 இதுகுறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் கூறுகையில், இது வியாபார யுக்தி என்று யாரும் நினைத்து விட வேண்டாம். தமிழை வளர்க்கவும், திருக்குறளின் பெருமைகளை மாணவ-மாணவிகளிடம் கொண்டு சேர்க்கும் வகையிலேயே இச்சலுகை அளிக்கப்படுகிறது என்றார்.

Next Story