மண் சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்க கோரிக்கை


மண் சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2021 2:55 AM IST (Updated: 13 Feb 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

குண்டும்-குழியுமாக உள்ள மண் சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்
மண் சாலை

கரூர் மாவட்டம், புகளூர் ரயில்வே கேட்டில் இருந்து நவீன எரிவாயு மயானம், பேச்சிப்பாறை, கவுண்டன்புதூர், செட்டித்தோட்டம், செல்வ நகர், நடையனூர், முனிநாதபுரம், கோம்புப் பாளையம், முத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல ரயில்வே கேட்டில் இருந்து மண் சாலை உள்ளது.
 இந்த சாலை, அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டதால் தற்போது மிகவும் பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், மழை காலத்தின்போது இந்த சாலை சேறும்-சகதியுமாக பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு மாறி விடுகிறது.
தார் சாலையாக...
இந்த மண் சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள்  கோரிக்கை மனுக்கள் அளித்தும் அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வெளியிடங்களுக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக வீடு திரும்புபவர்கள் அதிகளவு சிரமப்படுகின்றனர்.
 ஆகவே, இந்த மண்சாலையை, தார் சாலையாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Related Tags :
Next Story