திருச்செங்கோடு நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ
திருச்செங்கோடு நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே அணிமூர் ஊராட்சியில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல தீ அதிகளவில் எரிந்தது.
இதுகுறித்து திருச்செங்கோடு, வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் குப்பை கிடங்குகிற்கு விரைந்து வந்த குணசேகரன், சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.
=========
Related Tags :
Next Story