திருவாரூர் கமலாலய குளத்தில் பிணமாக மிதந்த காய்கறிகடைக்காரர் போலீசார் விசாரணை


திருவாரூர் கமலாலய குளத்தில் பிணமாக மிதந்த காய்கறிகடைக்காரர் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Feb 2021 6:13 AM IST (Updated: 13 Feb 2021 6:13 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் கமலாலய குளத்தில் காய்கறிகடைக்காரர் பிணமாக மிதந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவாரூர், 

திருவாரூர் கமலாலய குளத்தில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக மிதப்பதாக திருவாரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவாரூர் அருகே உள்ள காட்டூர் மில் தெருவை சேர்ந்த குப்புசாமி மகன் அசோகன் (வயது36) என்றும் இவர் காட்டூர் காளியம்மன் கோவில் எதிரே காய்கறிக்கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

வழக்குப்பதிவு

அசோகன் குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் மரணத்தில் வேறு மர்மம் உள்ளதா? என திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரசித்தி பெற்ற திருவாரூர் கமலாலய குளத்தில் காய்கறி கடைக்காரர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story