கட்டுமான பொருட்களின் விலை உயா்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது


கட்டுமான பொருட்களின் விலை உயா்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது
x
தினத்தந்தி 13 Feb 2021 6:18 AM IST (Updated: 13 Feb 2021 6:18 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி திருத்துறைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி,

கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய கட்டுனர் சங்க திருத்துறைப்பூண்டி மைய தலைவர் பொறியாளர் நா. துரைராயப்பன் தலைமை தாங்கினார்.

அகில இந்திய கட்டுனர் சங்க பொதுக்குழு உறுப்பினர் மாதவன், முன்னாள் தலைவர் கைலாசம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.ஆர். இளங்கோவன், துணைத்தலைவர் மா.சுப்பிரமணியம், இணை செயலாளர் ரகுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தகர் சங்க தலைவர் செந்தில்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

கோரிக்கை மனு

கட்டிட பொறியாளர் முன்னாள் மாநில துணை தலைவர் கே.கே.விசெல்வன், கட்டிட பொறியாளர் சங்க மண்டலம்- 3 தலைவர் ஆர்.எஸ்.ஆர்.செல்வகணபதி ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்டிட பொறியாளர் சங்க தலைவர் அய்யப்பன், , மன்னை தலைவர் சூர்யபிரகாஷ், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட தலைவர் காளிமுத்து, தி.மு.க. கட்டுமான சங்க மாவட்ட தலைவர் விஜயராகவன், மாவட்ட செயலர் தெஷ்ணாமூர்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அகில இந்திய கட்டுனர் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர், தலைமை தபால்நிலைய அதிகாரி ஆகியோரிடம் கோரிக்கை மனுக்களை அதன் தலைவர் துரை ராயப்பன் அளித்தார். முடிவில் பொருளாளர் ராஜமன்னார் நன்றி கூறினார்.

Next Story