பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து; தடுப்பு சுவரில் ஏறி நின்றதால் பரபரப்பு


பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதி விபத்து; தடுப்பு சுவரில் ஏறி நின்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Feb 2021 6:46 AM IST (Updated: 13 Feb 2021 6:46 AM IST)
t-max-icont-min-icon

பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் தடுப்பு சுவரில் கார் ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

குன்றத்தூரை சேர்ந்தவர் பார்த்திபன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், நேற்று ஆவடியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பூந்தமல்லி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி, பார்த்திபன் வந்த கார் மீது வேகமாக மோதியது.

இதனால், சாலையில் சுழன்ற கார் சாலையின் தடுப்பு சுவர் மீது ஏறி குறுக்கே நின்றது. இந்த விபத்தில், காரின் பின்பக்கம் சக்கரம் பலத்த சேதமடைந்தது. மேலும் விபத்தில் காரில் பயணம் செய்த யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தையடுத்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான காரை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story