சாலையை அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டும்போது போக்குவரத்து நெரிசல்


சாலையை அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டும்போது போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 13 Feb 2021 2:57 AM GMT (Updated: 13 Feb 2021 2:57 AM GMT)

சாலையை அகலப்படுத்துவதற்காக சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த புளிய மரங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று போக்குவரத்தில் சிக்கி தவித்தனர்.

வண்டலூர், 

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையயில் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சாலை அகலப்படுத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் கூடுவாஞ்சேரி, தைலாவரம், பொத்தேரி, மற்றும் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த புளிய மரங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருகின்றனர். 

இந்த புளிய மரங்களை வெட்டும் போது சென்னை நோக்கி செல்லும் வாகன ஒட்டிகளும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று போக்குவரத்தில் சிக்கி தவித்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வெட்டும்படி நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களிடம் அறிவுறுத்தினர்.

Next Story