25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் போராட்டம்


25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2021 10:12 AM IST (Updated: 13 Feb 2021 10:12 AM IST)
t-max-icont-min-icon

25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சென்னை, 

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், 21 மாத ஊதியம் நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சென்னை மாவட்ட தலைவர் ம.கோதண்டம் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தின்போது கு.பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஓய்வு ஊதியம் இல்லாத அரசு பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து அரசு நிறுவனங்களில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு நிரந்தர ஊதியம் வழங்க வேண்டும்.

இதுகுறித்து உடனடியாக அரசு எங்கள் சங்கத்தை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகமான முடிவு எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 21-ந்தேதி, மாநிலம் முழுவதும் பணியாளர்களை கூட்டி மாநாடு நடத்தி தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் போராட்டக்காரர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் அவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Next Story