கண்மாயில் மூழ்கி வாலிபர் பலி
கண்மாயில் மூழ்கி வாலிபர் பலியானார்
சாயல்குடி,
சாயல்குடி அருகே எஸ். வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மகன் முத்துக்குமார் (வயது30). இவர் விவசாய பணிக்காக கண்மாயில் உள்ள தண்ணீர் வழியாக மறுபக்கம் உள்ள வயலுக்கு சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி வடமலை சாயல்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.சாயல்குடி மற்றும் கமுதி தீயணைப்புத் துறையினர் சாயல்குடி நிலைய அலுவலர் பொன்னையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கண்மாயில் வாலிபர் உடலை மீட்டனர். இதுகுறித்து சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story