கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.
குறிப்பாக வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.
அதன்படி நேற்று அதிகாலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.
வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலில் நிலவும் ரம்மியமான சூழலையும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களையும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
இதனால் சுற்றுலா இடங்கள் களை கட்டின.
படகு சவாரி
குறிப்பாக பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர்பாயிண்ட், பைன் மரக்காடுகள், பசுமைபள்ளத்தாக்கு, தூண்பாறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகு சவாரி செய்தனர். ஏரிச்சாலையை சுற்றிலும் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை எதிரொலியாக, அந்த தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story