வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட முதியவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்


வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட முதியவரை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்
x
தினத்தந்தி 13 Feb 2021 6:55 PM IST (Updated: 13 Feb 2021 6:55 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 74). இவர் அப்பகுதியில் உள்ள 2-வது தளத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வேலுச்சாமி வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு கதவை திறக்க முயன்றபோது, கதவு திறக்காததால், சுமார் ஒரு மணி நேரமாக வெளியே வர முடியாமல் அவதிப்பட்டார்.

பின்னர் தொலைபேசி மூலமாக வேலுச்சாமி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணா நகர் தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலமாக மாடியில் ஏறி ஜன்னலை உடைத்து உள்ளே சென்று முதியவரை பத்திரமாக மீட்டனர். மேலும் வீட்டின் கதவு திறக்காததால் வெளியே வர முடியாமல் மாட்டி கொண்ட முதியவரால் சிறிது நேரம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் வீட்டிற்குள் மாட்டி கொண்ட முதியவரை விரைந்து வந்து மீட்ட அண்ணா நகர் தீயணைப்பு வீரர்களுக்கு வேலுச்சாமி நன்றி தெரிவித்தார்.

Next Story