கோவில்பட்டியில் மாநில கைப்பந்து போட்டி


கோவில்பட்டியில் மாநில கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 13 Feb 2021 10:18 PM IST (Updated: 13 Feb 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மாநில கைப்பந்து போட்டி நடந்தது.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மாநில கைப்பந்து போட்டி நடந்தது.

கைப்பந்து போட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு களம் உடற்பயிற்சி மையம் சார்பில் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. 

ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. ஆண்கள் பிரிவில் 36 அணிகளும், பெண்கள் பிரிவில் 12 அணிகளும் பங்கேற்று விளையாடின. போட்டியை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குருசித்ரவடிவேல் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர்கள் மாரிமுருகேசன், தங்க பாண்டியன் ஆகியோர்களுக்கு வீரர்கள் அறிமுகபடுத்திவைக்கப்பட்டனர். போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறைப்படி நடந்தது.

இதன்படி  ஆண்கள் பிரிவில் 4 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. 

அரைஇறுதிக்கு தகுதி
அதாவது ஆண்கள் பிரிவில் படர்ந்தபுளி, வரகனூர், பணகுடி, தூத்துக்குடி கால்டுவெல் அணிகளும், பெண்கள் பிரிவில் ஓசூர், கோவில்பட்டி, ஆத்தூர், தேனி அணிகளும் தகுதி பெற்றன. தொடர்ந்து அரைஇறுதி போட்டியும், நள்ளிரவில் இறுதிப்போட்டியும் நடந்தது.

Next Story