தூத்துக்குடியில் ரூ.1 கோடியில் அரசு இசை பள்ளிக்கு புதிய கட்டிடம் திறப்பு
தூத்துக்குடியில் ரூ.1 கோடியில் அரசு இசை பள்ளிக்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரூ.1 கோடியில் அரசு இசை பள்ளிக்கு புதிய கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது.
இசை பள்ளிக்கு புதிய கட்டிடம்
தூத்துக்குடி டூவிபுரத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு இசை பள்ளிக்கு தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் நிலையம் முன்பு 60 சென்ட் இடத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து அரசு இசை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் இசை பயிற்சியை தொடங்கி வைத்து அங்குள்ள அறைகளை நேரில் பார்வையிட்டார்.
அதிகாரிகள்
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வெள்ளச்சாமிராஜ், உதவி செயற்பொறியாளர் நாகஜோதி, கலைப்பண்பாட்டு துறை மண்டல உதவி இயக்குனா் சுந்தர், இசை பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-------------
Related Tags :
Next Story