தறிகெட்டு ஓடிய கார் மோதி 8 பேர் காயம்
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய கார் மோதி 8 பேர் காயமடைந்தனா்.
விக்கிரவாண்டி,
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் அய்யாதுரை(வயது 52). இவர் பம்மலில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர், மனைவி பேபி(50) மற்றும் உறவினர்களுடன் காரில் தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். காரை அய்யாதுரை ஓட்டினார். விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி பாதசாரிகள் மற்றும் 3 கார்கள், மோட்டார் சைக்கிள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் கார்கள் மற்றம் மோட்டார் சைக்கிள் சேதமானது. மேலும் திண்டிவனம் அடுத்த அருவாபாக்கத்தை சேர்ந்த குருமூர்த்தி(56), சக்திமுருகன்(22), கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஒதியத்துாரை சேர்ந்த ரட்சகன்(22), அய்யூர் அகரத்தை சேர்ந்த மணிகண்டன்(24), கடையம்பெருமாள்(21), மணிகண்டன்(23), வானூர் அஜித்குமார்(24), புதுச்சேரி நைனார் மண்டபத்தை சேர்ந்த சதீஷ்(31) ஆகிய 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story