ஆயுதப்படை போலீசாருக்கு அடுக்குமாடி குடியிருப்பு
ஆயுதப்படை போலீசாருக்கு அடுக்குமாடி குடியிருப்பு
திருப்பூர், பிப்.14-
திருப்பூர் மாவட்ட காவல்துறையில் ஆயுதப்படை போலீசாருக்கு ரூ.37 கோடியே 66 லட்சத்தில் காவலர் குடியிருப்பு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார். ஆயுதப்படையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 252 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
நல்லூரில் நடந்த விழாவில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், குத்துவிளக்கேற்றி குடியிருப்புகளை திறந்து வைத்தார். இதில் ஆயுதப்படை அதிகாரிகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீசார் கலந்து கொண்டனர்.
இதுபோல் காங்கேயத்தில் ரூ.88 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய போலீஸ் நிலைய கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். காங்கேயம் போலீஸ் நிலைய கட்டிடத்தையும் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கிவைத்தார்.
Related Tags :
Next Story