தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்ட 3 ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்ட 3 ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்
x
தினத்தந்தி 13 Feb 2021 11:19 PM IST (Updated: 13 Feb 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்ட 3 ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்.

தஞ்சாவூர்:-
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்ட 3 ஊழியர்கள் மயங்கி விழுந்தனர்.
கொரோனா தடுப்பூசி 
தஞ்சை மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அதன்படி நேற்றும் வழக்கம்போல் தடுப்பூசி போடும் பணி நடந்தது..
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணியாளர்களான தஞ்சை சிந்தாமணி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சாந்தி(வயது 48), வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த விமலாமேரி(51), நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த மனோகரன்(54) ஆகிய 3 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3 பேர் மயங்கி விழுந்தனர் 
தடுப்பூசி போடப்பட்ட சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் திடீரென மயங்கி விழுந்தனர். இதையடுத்து அங்கிருந்த டாக்டர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் பின் விளைவுகள் ஏற்படுமோ? என்ற அச்சத்தில் அவர்கள் மயக்கம் அடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து 3 பேரும் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்கு திரும்பினர். தொடர்ந்து அவர்களை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். 
இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி 
இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மருதுதுரை கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பூசி காரணமாக அவர்களுக்கு மயக்கம் ஏற்படவில்லை. அச்சம் காரணமாக, அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகமாகி விட்டது. தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டனர். 
மாவட்டம் முழுவதும் இதுவரையில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை’’ என்றார்.

Next Story