மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை


மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
x
தினத்தந்தி 13 Feb 2021 11:58 PM IST (Updated: 13 Feb 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.

அண்ணாமலைநகர், 

சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. 
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை பாலசுப்பிரமணியன் செய்தாா்.  

Next Story