பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி
சிங்கம்புணரி அருகே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலியானான்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே நாட்டார் மங்கலம்சாலையில் தனியார் பள்ளி அருகே குடியிருப்பவர் முருகன். இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 16). கண்ணமங்கலப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் மலைச்சாமி(17), அதே ஊரைச் சேர்ந்த மணி மகன் ராமகிருஷ்ணன் (19). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று இரவு கண்ணமங்கலபட்டியில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் சிங்கம்புணரி வழியாக அணைக்கரைப்பட்டி கிராமத்துக்கு ஆடல், பாடல் நிகழ்ச்சி பார்க்க சென்றனர். மோட்டார் சைக்கிளை லோகேஸ்வரன் ஓட்டி சென்று உள்ளான். அணைக்கரைப்பட்டி அருகே உள்ள பாலாற்றில் மோட்டார் சைக்கிள் மோதி 3 பேரும் தூக்கி வீசப்பட்டார்கள். இதில் சம்பவ இடத்திலேயே லோகேஸ்வரன் பரிதாபமாக இறந்தான். மற்ற 2 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story