கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்


கல்லூரி மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Feb 2021 12:29 AM IST (Updated: 14 Feb 2021 12:29 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரியில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

ிங்கம்புணரி,

சிங்கம்புணரியில் கல்லூரி மாணவ-மாணவிகள், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள். இந்த ஊர்வலம் சிங்கம்புணரி ஆர்.எம்.எஸ்.பெட்ரோல் பங்க் அருகே ெதாடங்கியது. ஊர்வலத்துக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைைம தாங்கினார்.
திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்ரகு கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் சாலை விதிமுறைகள் பற்றி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசம், கார்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஊர்வலம் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் முன்பு வரை நடைபெற்றது. இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story