விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2021 1:01 AM IST (Updated: 14 Feb 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டம் 
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. பேரூராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை செயல்படுத்த கோரியும், ஊராட்சிகளில் 100 நாள் வழங்கக்கூடிய வேலையை 200 நாட்களாக அதிகரிக்க வலியுறுத்தியும், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் கூடுதல் பெண் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. 
நடவடிக்கை 
இந்த போராட்டத்திற்கு ஒன்றிய பொருளாளர் கருத்தப்பாண்டி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி பேசினார். போராட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஜீவானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.

Next Story