நாங்குநேரியில் தெப்ப திருவிழா


நாங்குநேரியில் தெப்ப திருவிழா
x
தினத்தந்தி 14 Feb 2021 1:15 AM IST (Updated: 14 Feb 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் நேற்று இரவு தெப்ப திருவிழா நடந்தது.

நாங்குநேரி:

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஒரு கோட்டை எண்ணெய்க்காப்பு விழா நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு தெப்பத் திருவிழா நடந்தது. இதில் வானமாமலை பெருமாளுக்கும், திருவரமங்கை தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. மாலையில் சுவாமி தாயாருடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. அதன்பின் கோவில் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் பெருமாள் தாயாருடன் எழுந்தருளினர். அதில் 11 முறை தெப்பம் வலம் வந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெருமாள் தாயாருடன் மணவாளமாமுனிகள் எழுந்தருளும் இரண்டாம் நாள் தெப்பத் திருவிழா நடக்கிறது.

Next Story