திண்டுக்கல்லுக்கு ரெயிலில் வந்த 2 ஆயிரத்து 540 டன் ரே‌‌ஷன் பச்சரிசி


திண்டுக்கல்லுக்கு ரெயிலில் வந்த 2 ஆயிரத்து 540 டன் ரே‌‌ஷன் பச்சரிசி
x
தினத்தந்தி 14 Feb 2021 1:23 AM IST (Updated: 14 Feb 2021 1:23 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2 ஆயிரத்து 540 டன் ரே‌‌ஷன் பச்சரிசி வந்தது

திண்டுக்கல்:
தமிழகத்தில் ரே‌‌ஷன்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி, பச்சரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. 

இதற்கு தேவையான அரிசி, கோதுமையை மத்திய தொகுப்பில் இருந்து தமிழக அரசு வாங்கி வருகிறது. 

இதையொட்டி வடமாநிலங்களில் இருந்து அவை சரக்கு ரெயிலில் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

 அந்த வகையில் திண்டுக்கல்லுக்கு மாதந்தோறும் வெளிமாநிலங்களில் இருந்து அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்டவை ரெயிலில் வருகின்றன. 

இந்த நிலையில் நேற்று ஆந்திராவில் இருந்து திண்டுக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் பச்சரிசி வந்தது. இதில் 2 ஆயிரத்து 540 டன் பச்சரிசி கொண்டு வரப்பட்டு இருந்தது. 

இதையடுத்து லாரிகள் மூலம் அவை, திண்டுக்கல் முருகபவனத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தின் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. 

மேலும் தேவைக்கு ஏற்ப மாவட்டம் முழுவதும் ரே‌‌ஷன்கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story